Pages

June 21, 2011

ஞாபகத்தன்மையை மீளப்பெறமுடியுமா? ஒரு நரம்பியல் விஞ்ஞான ஆய்வின் முடிவு!

சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆய்வினடிப்படையில் இந்த பதிவு இடம்பெறுகின்றது. அது மூளை நரம்புகளுடன் தொடர்புடைய விஞ்ஞானம் அதாவது Neuro-Science பற்றிய ஓர் ஆய்வு. என்னால் இயன்றளவு இலகு தமிழில் இதனை தர முயல்கிறேன். இந்த ஆய்வு அறிக்கையை நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமேயானால் கீழே முடிவில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலமாக சென்று வாசிக்கலாம்.

ஞாபக மறதி?? 

இந்த ஆய்வின் கருப்பொள் ஞாபகசக்தியை இழந்த ஒருவருக்கு மீண்டும் அந்த பழைய ஞாபகசக்தியை கொண்டு வரமுடியுமா என்பதே! அப்படி எதாவது ஒருவிதத்தில் அது முடியுமானால் பலருக்கு அது  வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த தியோடர் பெர்கர் என்பவரும் அவரது சகாக்களுமாக சேர்ந்து ஞாபகசக்தியை இழந்த மூளையை எவ்வாறு rerestore அதாவது மீள பழைய நிலைக்கு கொண்டு வரமுடியுமென பல நாட்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அவர்கள் ஆய்வுகூட எலிகளை வைத்து செய்த ஒரு ஆய்வு பலரையும் இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது எனலாம்.
Prof Theodore Berger
ஒரு ஆய்வுகூட எலியின் மூளைப்பகுதியின் Hippocampus எனும் பகுதியில், அதாவது மூளையின் ஞாபகசக்தியை சேமித்திருக்கும் தொகுதியில் (Hippocampus என பெயர் வந்ததற்கு காரணம் அப்பகுதி ஒரு கடல்குதிரை வடிவில் அமைந்துள்ளதேயாகும். ஆங்கிலத்தில் கடல்குதிரையை hippocampus என அழைப்பது வழமை) மின்முனை (Electrode) பொருத்தப்பட்டு கணணியின் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அதன் மூளையின் தொழிற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என பதிவுசெய்யப்பட்டது.
Hippocampus
பின்னர் ஒருவித இரசாயன பதார்த்தத்தை எலியினது hippocampus பகுதினுள் செலுத்தி ஞாபகசக்தியை தேடிச்செல்லும் நரம்பினை மூடச்செய்யப்பட்டது. பின்னர் அந்த குறிப்பிட்ட எலியை பழைய முன்பு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியை செய்யுமாறு தூண்டிய போது அந்த எலியினால் அதனை ஞாபகப்படுத்தி அதனை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது. 
மின்முனை மூலம் தொடர்பிலுள்ள எலி 
எவ்வாறாயினும் மீண்டும் மின்முனைகளின் உதவியுடன் முன்னமே பதிவு செய்யப்பட்டிருந்த அக்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான தொழில்பாடுகளை வழங்கியவுடன் அந்நிகழ்ச்சியை அவ்வெலிக்கு முன்னர் போன்று செய்ய முடிந்தமை அவதானிக்கப்பட்டது. இக்குறிப்பிட்ட நிகழ்வின் போது அவ்விரசாயன பதார்த்தம் தொடர்ந்து உள்ளே தான் இருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் பதிவு செய்த நிகழ்ச்சிக்கான தொழிற்பாட்டை வேறு தொழிற்பாடுகளுடன் கலந்து (after scrambling) மின்முனை ஊடாக கலந்து வழங்கிய போது அவ்வெலியினால் முன்னரே குறிப்பிட்ட அந்நிகழ்ச்சியை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகூட பரிசோதனை முடிவின் பிரகாரம் தியோடர் பெர்கர் கூறியதாவது,

1.       மின்முனைகள் மூலமாக அந்நிகழ்ச்சி மீண்டும் செலுத்தப்பட்டபோது ஒரு சிறிய நேரமே அதாவது தற்காலிகமாகவே அவ்வெலியினால் அந்நிகழ்ச்சி நினைவு கூறப்பட்டது. இது மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2.      இந்த ஒரு நிகழ்ச்சி போன்று பல நிகழ்ச்சிகளை ஒன்றாக சேகரித்து வழங்கி ஆய்வு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

3.       மனிதர்களுக்கு பரிசோதிக்க முன்னர் பல்வேறுபட்ட வெவ்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

4.       மனிதர்களுக்கும் இவ்வாறு உட்புகுத்தலின் மூலம் நினைவுகளை, பேச்சாற்றல்களை மீண்டும் வரவைக்க முடியும்.

அதாவது பெரும்பாலான நபர்களினால் இவ்வாய்வு மனிதர்களுக்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்பப்படுகிறது. எது எவ்வாறாயினும் சில விடயங்களை மீண்டும் ஞாபகத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுவதே மேல் என நான் நினைக்கிறேன். எனினும் பரவலாக நன்மையை மட்டும் நோக்குமிடத்து இவ்வாய்வு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன்.


Source:
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

8 comments:

RIPHNAS MOHAMED SALIHU said...

மறதி இறைவன் கொடுத்த ஒரு பெரிய வரப்பிரசாதம். மறந்தத மறந்ததாவே விட்டுடாம அதை எல்லாமா திருப்பி எடுப்பாங்க?

Imran Saheer said...

ரிப்னாஸ் நீங்கள் சொல்வது முற்றிலுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஞாபகத்தை முற்று முழுதாக தொலைத்து கஷ்டப்படுபவர்களுக்கு இது பிரயோஜனமாக இருக்குமென நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். :)

குணசேகரன்... said...

உங்கள் பதிவு அருமை

Imran Saheer said...

நன்றி குணசேகரன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Mohamed Faaique said...

உங்கள் நன்றாக இருக்கு... இன்றுதான் முதலில் வருகிறேன். அருமையான தகவல்களை வழங்கி இருக்கிறீர்கள்

Imran Saheer said...

நன்றி Faaique, உங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும்.

Blog27999 said...

As reported by Stanford Medical, It's indeed the SINGLE reason this country's women get to live 10 years longer and weigh 19 kilos less than we do.

(And realistically, it is not about genetics or some secret diet and really, EVERYTHING about "how" they are eating.)

BTW, I said "HOW", not "WHAT"...

Click this link to reveal if this quick questionnaire can help you find out your real weight loss potential

Blog27999 said...

As reported by Stanford Medical, It's in fact the SINGLE reason women in this country get to live 10 years longer and weigh on average 42 lbs less than we do.

(By the way, it is not related to genetics or some secret diet and really, EVERYTHING around "how" they are eating.)

P.S, What I said is "HOW", not "what"...

CLICK on this link to determine if this short test can help you release your true weight loss potential

Post a Comment

பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...